மானிய விலை இருசக்கர வாகனத் திட்டம்: பயனாளிகள் தேர்வுப் பணி தீவிரம்
பணிக்குச் செல்லும் மகளிருக்கு, மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின்கீழ் விண்ணப்பித்துள்ள 3.36 லட்சம் பேரிலிருந்து பயனாளிகளைத் தேர்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடுமானிய விலை இருசக்கர வாகனத் திட்டம்: பயனாளிகள் தேர்வுப் பணி தீவிரம்
பணிக்குச் செல்லும் மகளிருக்கு, மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின்கீழ் விண்ணப்பித்துள்ள 3.36 லட்சம் பேரிலிருந்து பயனாளிகளைத் தேர்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
பணிக்குச் செல்லும் மகளிருக்கு, மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின்கீழ் விண்ணப்பித்துள்ள 3.36 லட்சம் பேரிலிருந்து பயனாளிகளைத் தேர்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அம்மா இரு சக்கர மானியத் திட்டத்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24 -ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்க உள்ளார். இதற்கான பணிகளில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இத்திட்டத்தில் பயன்பெற தமிழகம் முழுவதும் மகளிர் மிகுந்த ஆர்வத்துடன் பிப்ரவரி 10 -ஆம் தேதி வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களில் விண்ணப்பங்களை அளித்தனர்.
சென்னை - 35,028, கோவை - 22,912, சேலம் -19,847 மற்றும் காஞ்சிபுரம் - 16,714 பேர் என அதிகபட்சமாக விண்ணப்பித்துள்ளனர். தமிழகம் முழுவதும் மொத்தம் 3,36,103 பேர் விண்ணப்பம் அளித்துள்ளனர். இந்த விண்ணப்பங்களைப் பரிசீலித்து, 50 சதவீத மானியத்துடன் ஸ்கூட்டர் பெறுவதற்கான பயனாளிகளைத் தேர்வு செய்யும் பணியை அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.