முகப்பு
தமிழ்நாடு

விறகு சேகரிக்க சென்றவர் கரடி தாக்கி சாவு

வனப் பகுதியை ஒட்டியுள்ள இடத்துக்கு விறகு சேகரிக்கச் சென்றவர் கரடியால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். 

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:14 PM
பகிர்:

வனப் பகுதியை ஒட்டியுள்ள இடத்துக்கு விறகு சேகரிக்கச் சென்றவர் கரடியால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். 
வால்பாறையை அடுத்த வாட்டர்பால் எஸ்டேட் என்.சி. டிவிஷனில் வசித்து வந்தவர் சூசை (50). திருமணம் ஆகாத இவர், எஸ்டேட்டில் பணியாற்றி வரும் தனது தம்பி இருதயராஜுடன் வசித்து வந்தார். சூசைக்கு மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. 
இந்நிலையில், இவர் விறகு எடுத்து வருவதாகக் கூறி, வனத்தையொட்டியுள்ள உள்பகுதிக்குச் சென்றுள்ளார். 
அதன் பிறகு அவர் வீடு திரும்பாததால் இருதயராஜும், அப்பகுதி மக்களும் சேர்ந்து பல்வேறு பகுதிகளில் அவரைத் தேடியுள்ளனர். 
அப்போது, வனப் பகுதி வழித்தடத்தில் முகத்தில் பலத்த காயத்துடன் சூசை இறந்து கிடப்பது இரவு 9 மணி அளவில் தெரியவந்தது.
தகவல் கிடைத்து சம்பவ இடத்துக்குச் சென்ற வனத் துறையினர், சூசை உடல் அருகில் காணப்பட்ட கரடியின் கால் தடங்களையும், அவரது முகத்தில் உள்ள கீறல்களையும் பார்த்து அவரைக் கரடி தாக்கியிருப்பதை உறுதி செய்தனர். 
சூசை உடல் பிரேதப் பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக வனத் துறை அதிகாரிகள் விசாரித்து 
வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →