முகப்பு
தமிழ்நாடு

பத்திரப் பதிவுக்கான இணையதளம் தொடக்கம்

ஆன்லைன் மூலம் பத்திரப் பதிவு செய்யும் திட்டத்துக்கான இணையதளத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:14 PM
பகிர்:

ஆன்லைன் மூலம் பத்திரப் பதிவு செய்யும் திட்டத்துக்கான இணையதளத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.
பொதுமக்கள் தங்களது ஆவணப் பதிவு தொடர்பான தேவைகளை விரைவாக பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் ஒருங்கிணைந்த இணையதள அடிப்படையிலான மென்பொருள் தயாரிக்கப்படும் என்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
அதன்படி ரூ.176.44 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த வலை அடிப்படையிலான ஸ்டார் 2.0 திட்டத்துடன், அதற்காக மேம்படுத்தப்பட்ட www.tnreginet.gov.in இணையதளமும் வடிவமைக்கப்பட்டது. இந்த இணையதளத்தை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திங்கள்கிழமை தொடங்கி வைத்தார். 
இத்திட்டத்தின் மூலம் வீட்டிலிருந்தபடியே பொதுமக்கள் இணையவழியில் ஆவணங்களை உருவாக்குதல், உரிய ஆதாரங்களுடன் பதிவுக்கு முன்பே இணையவழியாக அனுப்பி சரிபார்த்தல், அலுவலக வருகைக்கு முன்பதிவு செய்தல், ஆவணங்களை 10 நிமிஷத்தில் பதிவு செய்து ஒரே வருகையில் திரும்ப வழங்குதல் போன்றவற்றை இந்த இணையதளம் மூலம் மேற்கொள்ளலாம்.
மின்னஞ்சலில் ஆவண நிலை: குறுஞ்செய்தி, மின்னஞ்சல் வாயிலாக, ஆவண நிலை பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிவிக்கும் வசதியும் இதில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 
ஆள்மாறாட்டம் தடுப்பு: இணைய வழி கட்டணம் செலுத்தும் முறை, ஆவணப்பதிவின்போது மோசடிப் பத்திரப் பதிவுகளைத் தவிர்க்க, முந்தைய ஆவணதாரருக்கு குறுஞ்செய்தி அனுப்புதல், அவரின் கைரேகையை ஒப்பீடு செய்து ஆள்மாறாட்டத்தைத் தடுக்கும் புதிய வசதி, கட்டணமில்லா தொலைபேசி வழி பொதுமக்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், பதிவுக்குப்பின் பட்டாமாறுதல் மனுக்களை இணையவழியில் உடனுக்குடன் வருவாய்த் துறைக்கு அனுப்பி பொதுமக்களுக்கு குறுஞ்செய்தி, ஒப்புகை சீட்டு அனுப்பும் புதிய வசதியும் இந்த இணையதளத்தில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
வில்லங்கச் சான்று: மேலும், இணையவழி கட்டணமில்லா வில்லங்கச் சான்று பதிவிறக்கம் செய்யும் வசதியானது 30 ஆண்டுகளிலிருந்து 42 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →