மதுரை மீனாட்சியம்மன் கோயில் தீ விபத்து : முதல்வர் பழனிசாமி ஆலோசனை
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து கோயில் பாதுகாப்பு குறித்து முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தியுள்ளார்.
சென்னை: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து கோயில் பாதுகாப்பு குறித்து முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தியுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தீ விபத்து குறித்தும், சீரமைப்புப் பணிகள் குறித்தும் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனுடன் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. கோயிலில் தீ விபத்து காரணமாக ஏற்பட்ட சேதம் குறித்து மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் விளக்கம் அளித்துள்ளார்.
தீ விபத்தில் சேதமடைந்த மீனாட்சி அம்மன் கோயிலை ஆகம விதிப்படி சீரமைப்பது பற்றியும், கோயிலின் பாதுகாப்பு குறித்தும் முதல்வர் பழனிசாமி கேட்டறிந்து வருகிறார்.