தமிழ்நாடு

பொதுத்தேர்வு குறித்த மன அழுத்தம்: சமூக வலைதளங்கள் மூலம் ஆலோசனை

DIN

பொதுத்தேர்வு குறித்த மன அழுத்தத்தைப் போக்க சமூக வலைதளங்கள் மூலமாக மாணவர்கள், பெற்றோருக்கு ஆலோசனை வழங்கும் திட்டத்தை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடக்கி வைத்தார். இது குறித்து பள்ளிக் கல்வித்துறை புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்தி:
அரசுப் பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் மன அழுத்தம், கவலை, பயம் ஆகியவற்றைக் களையும் நோக்கில், கல்வித்துறையும், 'தி லெட்' அமைப்பும் ஒருங்கிணைந்து தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு பிரசாரத்தைத் தொடங்கவுள்ளது. இந்தத் திட்டத்தை அமைச்சர் செங்கோட்டையன் புதன்கிழமை (பிப்.14)-இல் தொடக்கி வைத்தார். ஏப்ரல் வரை இந்தப் பிரசாரம் தொடரும். 
மனநலம் சார்ந்த ஆலோசகர்கள், கல்வியாளர்கள், வல்லுநர்கள் ஆகியோர் மாணவர்கள், பெற்றோருக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்க தயாராக உள்ளனர். பிரச்னைகளுக்கான ஆலோசனை பெறுவதற்கு சுட்டுரை (டுவிட்டர்), முகநூல், கட்செவி அஞ்சல் ('வாட்ஸ்-ஆப்') ஆகியவற்றில் தொடர்பு கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 
மாணவர்களை உற்சாகப்படுத்தவும், அவர்தம் மன அழுத்தத்திலிருந்து விடுபடவும் ஊடகங்கள், பத்திரிகைகள் மூலம் வெளியாகி இருக்கும் கருத்துத் துணுக்குகள் அவர்களுக்கு அளிக்கப்பட உள்ளன. 
மாணவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய சமூக வலைதள முகவரிகள்:


கட்செவி அஞ்சல் எண்: 7373002426

முகநூல் பக்கம்: Tamil Nadu Govt Exam stress Relief

டுவிட்டர்: @TNSchoolEduDept

மின்னஞ்சல் முகவரி: ednstressrelief@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொருளின் பொருள் கவிதை

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

பைசன் காளமாடன் படத்தின் பூஜை ஸ்டில்ஸ்

வேதாத்திரி மகரிசியின் படைப்புகள்

SCROLL FOR NEXT