தமிழ்நாடு

பொலிவுறு நகரம்: பொதுமக்கள் தகவல் தரலாம்

DIN

"ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ், தகவல் சேகரிக்க வரும் நபர்களிடம், தகவல்களை கொடுத்து உதவுமாறு, வாடிக்கையாளர்களிடம், குடிநீர் வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்தி: சென்னை தியாகராய நகர், சி.ஐ.டி. நகர், மேற்கு மாம்பலம், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை ஆகிய இடங்களில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை செயல்படுத்த, தமிழக குடிநீர் முதலீட்டு நிறுவனத்தை ஆலோசகர்களாக நியமித்துள்ளது.
குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றுதல் கட்டமைப்புகளை, பொலிவுறு நகர திட்டப் பகுதிகளில் மேம்படுத்துவதற்காக, தமிழக குடிநீர் முதலீட்டு நிறுவன பிரதிநிதிகள், வீடு வீடாக சென்று, நுகர்வோர் தகவல்களை, உரிய படிவத்தில் பதிவு செய்யும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
"பொலிவுறு நகரம்' திட்டம், செயல்படுத்த உள்ள பகுதியில் வசிப்போர், தகவல் சேகரிக்க வரும் நபர்களிடம் தகவல்களைக் கொடுத்து உதவ வேண்டும் எனச் செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாலை விபத்தில் இளைஞா் பலி

கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளில் மழை

திருமானூா் பகுதியில் காற்றுடன் மழை

முருகன் கோயில்களில் சித்திரை மாத காா்த்திகை பூஜை

சிவகாசியில் கயிறு குத்து திருவிழா

SCROLL FOR NEXT