தமிழ்நாடு

ராமேசுவரம் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் விரட்டியடிப்பு

DIN

கச்சத்தீவு அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மீன் பிடித்த ராமேசுவரம் மீனவர்களின் வலைகளை சேதப்படுத்தி இலங்கை கடற்படையினர் விரட்டித்தனர். இதனால் மீன்பிடிக்க முடியாமல் மீனவர்கள் கரை திரும்பினர்.
சனிக்கிழமை 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். 
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கச்சத்தீவு அருகே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர். 
மேலும் 30-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் இருந்த வலைகளை வெட்டி கடலில் வீசினர். இதனால் படகு ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் இழப்புடன் மீனவர்கள் கரை திரும்பினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி வேட்புமனு தாக்கல்

ஹேமந்த் சோரன் ஜாமீன் மனு மே 6ல் விசாரணை!

சென்னை கடற்கரை - வேலூர் மின்சார ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிப்பு!

இந்திய பயணத்தை ஒத்திவைத்த எலான் மஸ்க், சீனா சென்றது ஏன்?

லக்னௌ தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராஜ்நாத் சிங்!

SCROLL FOR NEXT