முகப்பு
தமிழ்நாடு

கோயம்பேடு அலுவலகத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் கமல் சந்திப்பு! 

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை நடிகர் கமல்ஹாசன் சந்தித்துப் பேசினார்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:17 PM
பகிர்:

சென்னை: சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை நடிகர் கமல்ஹாசன் சந்தித்துப் பேசினார்.

தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ள நடிகர் கமல் பிப்.21 முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்வதாகவும், அன்றைய தினம் கட்சியின் பெயரை அறிவிக்கப் போவதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த சுற்றுப் பயணத்தை முதல்கட்டமாக ராமேஸ்வரத்தில் ஆரம்பித்து பின் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட மக்களை சந்திக்க உள்ளதாகவும், ”மக்களின் ஆதரவோடு இந்த சுற்றுப் பயணம் தொடங்கிகிறேன் கரம் கோர்த்திடுங்கள் எனவும் தெரிவித்திருந்தார்.

ஞாயிற்றுக் கிழமை அன்று நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கலைஞர் கருணாநிதி ஆகியோரை நடிகர் கமல்ஹாசன் சந்தித்துப் பேசினார்.

இந்நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை, திங்கள் அன்று காலை நடிகர் கமல்ஹாசன் சந்தித்துப் பேசினார்.இந்த சந்திப்புக்குப் பிறகு வெளியே வந்த கமல்ஹாசன் செய்தியாளர்களைச் சந்தித்த பொழுது கூறியாதவது:

அரசியலில் எனக்கு மூத்தவரான விஜய்காந்த்தினைச் சந்தித்து, எனது பயணத்திற்கு அவரது வாழ்த்துக்களை பெற்றேன்.

திராவிட கொள்கைகளைப் பற்றிக் கூறும் நான் அதனை சாதித்துக் கா ட்டுவேன். 

நானும் அரசியல் தலைவரான பிறகு விஜயகாந்தை அவரது அலுவலகத்தில் சந்திப்பது பொருத்தம்தான்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

முழு கட்டுரையைப் படிக்க →