தமிழ்நாடு

காலமானார் வயலின் இசைக் கலைஞர் பரூர் எம்.எஸ்.அனந்தராமன்

DIN

மூத்த வயலின் இசைக் கலைஞர் பரூர் எம்.எஸ்.அனந்தராமன் (94) உடல்நலக்குறைவு காரணமாக சென்னை மயிலாப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் திங்கள்கிழமை காலமானார். 
அவருக்கு வயலின் இசைக் கலைஞர்கள் எம்.ஏ. சுந்தரேஸ்வரன், எம்.ஏ. கிருஷ்ணசுவாமி என்ற இரு மகன்கள், ராணிமேரி கல்லூரி இசைத்துறை தலைவர் எம்.ஏ. பாகீரதி என்ற மகள் ஆகியோர் உள்ளனர். 
மறைந்த எம்.எஸ்.அனந்தராமன் தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 25 ஆண்டுகளுக்கும் மேல் வயலின் இசைப் பேராசிரியராகப் பணியாற்றினார். இவரிடம் வயலின் இசை பயின்ற மாணவர்கள் உலகின் பல்வேறு நாடுகளில் இசை வல்லுநர்களாக உள்ளனர். கர்நாடக இசையிலும் இந்துஸ்தானி இசையிலும் சிறந்து விளங்கியவர். சங்கீத நாடக அகாதெமி, கலைமாமணி உள்பட மத்திய, மாநில அரசுகளின் சார்பில் வழங்கப்பட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றவர். 
மறைந்த எம்.எஸ்.அனந்தராமனின் இறுதிச் சடங்குகள் சென்னை கண்ணம்மாபேட்டையில் உள்ள மயானத்தில் திங்கள்கிழமை (பிப்.19) நடைபெற்றன. தொடர்புக்கு: 9884159927, 044-24984025

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT