தமிழ்நாடு

மூத்தவர் என்ற முறையில் வாழ்த்து: விஜயகாந்த் சந்திப்புக்கு பிறகு கமல் பேட்டி

DIN

அரசியல் கட்சி தொடங்கவுள்ள நடிகர் கமல்ஹாசன், தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை திங்கள்கிழமை (பிப்.19) சந்தித்து வாழ்த்துப் பெற்றார். இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, முன்னாள் இந்திய தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் ஆகியோரைச் சந்தித்து வாழ்த்து பெற்ற கமல், நடிகர் ரஜினிகாந்த், திமுக தலைவர் கருணாநிதி ஆகியோரை ஞாயிற்றுக்கிழமை சந்தித்தார். 
அவர்களைத் தொடர்ந்து தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை சந்தித்தார். அப்போது நடிகர் கமல்ஹாசனை ஆரத் தழுவி வரவேற்ற விஜயகாந்த், அரசியலுக்கு வரவேற்றதோடு, வருகிற 21 ஆம் தேதி தொடங்க உள்ள அரசியல் பயணத்துக்கு வாழ்த்தும் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் அளித்த பேட்டி:
நான் தொடங்க இருக்கும் அரசியல் பயணத்துக்கு விஜயகாந்த்திடம் வாழ்த்து பெற்றேன். "நடிகர்கள் ரஜினி, கமல் ஆகியோர் சினிமாவில் எனக்கு மூத்தவர்களாக இருக்கலாம். ஆனால், அரசியலில் நான்தான்அவர்களுக்கு மூத்தவன்' என ஒரு தொலைக்காட்சி பேட்டியில் விஜயகாந்த் எனக்கு நினைவுபடுத்தியிருந்தார். அந்த வகையில், மூத்தவர் என்ற முறையில் அவரைச் சந்தித்து, அரசியல் பயணத்துக்குச் சென்று வருகிறேன் எனச் சொல்லத்தான் இங்கு வந்தேன் என்றார்.
மேலும், "தமிழகத்தில் திராவிட அரசியலுக்கு இனி வாய்ப்பு இல்லை. ஆன்மிக அரசியல்தான் சாத்தியம்' என பாஜக தலைவர்கள் கூறிவரும் கருத்து குறித்த கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன், "சக்சஸ்...' என்ன செய்து காட்டியது என்பது தெரியும் எனப் பதிலளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டிடிஇஏ பூசா சாலைப் பள்ளியில் ஏடிஎல் சமூக தின விழா

குடியிருப்புக் கட்டடத்தில் தீ விபத்து: தீயணைப்பு வீரா் உள்பட 3 போ் காயம்

வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

ரூ. 1 லட்சம் போதைப் பொருள்கள் கடத்தல்: தம்பதி கைது

கிணற்றில் மூதாட்டி சடலம் மீட்பு

SCROLL FOR NEXT