தமிழ்நாடு

எனக்கான ஆதரவை இளைஞர்கள் முடிவு செய்வர்: கமல்ஹாசன்

DIN

எனக்கு எத்தனை விழுக்காடு வாக்குகள் கிடைக்கும் என்பதை இளைஞர்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார். அரசியல் கட்சி தொடங்கவுள்ள நடிகர் கமல்ஹாசனை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செவ்வாய்க்கிழமை சந்தித்தார். 
சென்னை ஆழ்வார்பேட்டை அலுவலகத்துக்கு வந்த சீமானை, நடிகர் கமல்ஹாசன் வரவேற்றார். கமல்ஹாசனை அரசியலுக்கு வரவேற்றதோடு, புதிதாக தொடங்கவுள்ள அரசியல் கட்சிக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார் சீமான். பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களிடம் பேசினர்.
கமல்ஹாசன் பேசியது: அரசியலுக்கு எல்லோரும் வர வேண்டும் என்பதுதான் எங்களது வேண்டுகோள். வராமல் இருந்ததால்தான் என்னைப் போன்றவர்கள் வர வேண்டிய சூழல் வந்தது. 30 வருடங்களுக்கு முன் யாராவது வந்திருந்தால், நான் எனக்கான சினிமா தொழிலை மட்டுமே பார்த்துக் கொண்டு இருந்திருக்கலாம். அரசியலை யாராவது பார்த்துக் கொள்வார்கள் என்று விட்டு வைப்பது தவறு என்றே நான் நினைக்கிறேன்.
அதிமுக தலைவர்களை ஏன் சந்திக்கவில்லை?: அதிமுக ஆட்சியே சரியில்லையென்று சொல்லிக் கொண்டிருக்கும் போது, அவர்களை நான் எப்படி சந்திக்க முடியும். ராமதாஸ் போன்ற மூத்தவர்கள் என் அரசியல் நிலைப்பாட்டை விமர்சிக்கிறார்கள். அது இருக்கட்டும். வாக்கு விழுக்காடு விதத்தை இளைஞர்கள்தான் முடிவு செய்ய வேண்டும் . இளைஞர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டும். மூத்தவர் என்று சொல்லும் போது, என் அண்ணன் சாருஹாசனையும் சேர்த்துதான் சொல்கிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் பணவரவு யாருக்கு: வார பலன்கள்!

சேலம், ஜலகண்டபுரம் மேம்பாலம் அருகே 3 உடல்கள்: கொலையா?

ஓடிடியில் ‘ஆவேஷம்’ எப்போது?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

சதுரகிரிக்குச் செல்ல மே.5 முதல் அனுமதி!

SCROLL FOR NEXT