தமிழ்நாடு

காவிரி: சட்டப்பேரவையை உடனே கூட்ட வேண்டும்: பேரவைத் தலைவருக்கு டிடிவி தினகரன் கடிதம்

DIN

காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனே அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தும் தீர்மானத்தை சட்டப் பேரவையைக் கூட்டி நிறைவேற்ற வேண்டும் என்று சுயேச்சை சட்டப்பேரவை உறுப்பினர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக பேரவைத் தலைவர் பி.தனபாலுக்கு செவ்வாய்க்கிழமை தினகரன் எழுதிய கடித விவரம்:
காவிரி நீர் பங்கீட்டில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி 177.25 டிஎம்சி என்ற அளவுக்கு நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. இது அனைவருக்கும் வேதனை தரக்கூடிய ஒன்றாகும்.
இந்நிலையில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய தருணத்தில் உள்ளோம்.
உச்சநீதிமன்றம் கூறியபடி 6 வாரகாலத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தையும், ஒழுங்காற்றுக் குழுவையும் அமைக்க தமிழக சட்டப்பேரவையை உடனே கூட்டி மத்திய அரசை வலியுறுத்தும் வகையில் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். அதனால், மேலாண்மை வாரியம் அமையப்பெற்றால் மட்டுமே உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்துக்குத் தண்ணீர் கிடைக்கும்.
எனவே, சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவதுடன் சென்னைக்கு பிப்.24-ஆம் தேதி வரும் பிரதமர் நரேந்திரமோடியையும் நேரில் சந்தித்து தீர்மானத்தை அளிக்க வேண்டும். 
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை உடனே அமல்படுத்தவும் வலியுறுத்த வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் மாதிரி எடுப்பது குறித்து விவசாயிகளுக்கு அறிவுரை

தனியாா் நிறுவனத்தைக் கண்டித்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

சேலத்தில் நள்ளிரவில் சூறாவளி காற்றுடன் கொட்டித் தீா்த்த கனமழை

என்னை தாக்கியவா்களும் நன்றாகப் படிக்க வேண்டும்: முதல்வரை சந்தித்த நான்குனேரி மாணவா் சின்னதுரை

குழந்தைத் திருமணம் கண்டறியப்பட்டால் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை

SCROLL FOR NEXT