அதிமுக வங்கிக் கணக்கு விவகாரம் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
அதிமுகவின் வங்கி கணக்கு விவரங்களை தங்களுக்கு தரக் கோரி வி.கே.சசிகலா, டிடிவி தினகரன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை வரும் மார்ச் மாதம் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது உயர்
தமிழ்நாடுஅதிமுக வங்கிக் கணக்கு விவகாரம் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
அதிமுகவின் வங்கி கணக்கு விவரங்களை தங்களுக்கு தரக் கோரி வி.கே.சசிகலா, டிடிவி தினகரன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை வரும் மார்ச் மாதம் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது உயர்
அதிமுகவின் வங்கி கணக்கு விவரங்களை தங்களுக்கு தரக் கோரி வி.கே.சசிகலா, டிடிவி தினகரன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை வரும் மார்ச் மாதம் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது உயர் நீதிமன்றம்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் வி.கே.சசிகலா, டிடிவி தினகரன் சார்பில் தாக்கல் செய்த மனுவில், அதிமுக அம்மா,
புரட்சித்தலைவி அம்மா அணிகள் சார்பில் கடந்த ஆண்டு செப்டம்பர் 12-ஆம் தேதி சென்னை வானகரத்தில் பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் தங்களை கட்சியிலிருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும். அதிமுகவின் 3 வங்கிக் கணக்குகளை முதல்வர் எடப்படாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கையாள தடை விதிக்கவும், கட்சியின் ஆவணங்களை கையாள தடை விதிக்கவும் கோரி வழக்குத் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அதிமுகவின் 3 வங்கிக் கணக்குகளைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. அதன்படி வங்கிக் கணக்கு விவரங்கள் உயர்நீதிமன்றத்தில், முத்திரையிடப்பட்ட உறையில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வங்கிக் கணக்குகளைத் தங்கள் தரப்புக்கு வழங்க வேண்டும் என வி.கே.சசிகலா தரப்பில் வாதிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் தரப்பில் வாதிடப்பட்டது.இதனையடுத்து கோரிக்கைகள் குறித்து இருதரப்பும் தனித்தனியாக மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை வரும் மார்ச் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.