தினகரன் வெற்றிக்கு எதிரான வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் டிடிவி தினகரனின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்.
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் டிடிவி தினகரனின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் தேசிய மக்கள் கட்சியைச் சேர்ந்த ரவி என்பவர் தாக்கல் செய்த மனுவில், "ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட டிடிவி தினகரன் வெற்றி பெற்றார். நூதன முறையில் பணப்பட்டுவாடா செய்து, இறுதி நேரத்தில் ஜெயலலிதாவின் சிகிச்சை வீடியோவை வெளியிட்டதும் அவர் வெற்றிக்கு காரணமாகும். ஆனால் அவர்மீது தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே தேர்தல் விதிமுறை மீறலில் ஈடுபட்டு பெற்ற வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, மனுவில் உள்ள சில குறைபாடுகளை சரிசெய்ய உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தார்.