மைக்ரோ ஓவனில் கடத்தி வரப்பட்ட தங்கம் பறிமுதல்
மலேசியாவிலிருந்து இலங்கை வழியாக மதுரை வந்த விமானத்தில், நூதன முறையில் மைக்ரோ ஓவனில் கடத்தி வரப்பட்ட 814 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது
மலேசியாவிலிருந்து இலங்கை வழியாக மதுரை வந்த விமானத்தில், நூதன முறையில் மைக்ரோ ஓவனில் கடத்தி வரப்பட்ட 814 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இலங்கையிலிருந்து புதன்கிழமை இரவு பயணிகள் விமானம் மதுரை வந்தது. விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத் துறை உதவி ஆணையர் வெங்கடேஷ்பாபு தலைமையிலான அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில், சென்னையைச் சேர்ந்த இம்ரான்கான் (21) என்பவர் மலேசியாவிலிருந்து இலங்கை வழியாக மதுரை வந்துள்ளார்.
அதிகாரிகள், அவரது உடைமைகளை சோதனையிட்ட போது. அதில், அவர் கொண்டுவந்த மைக்ரோ ஓவனின் பின்பக்கம் சூடேறும் கம்பியைப் (காயில்) போன்று செவ்வக வடிவில் தங்கத்தை பொருத்தியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 814.300 கிராம் எடை கொண்ட இந்த தங்கத்தின் மதிப்பு ரூ. 24,90,129 எனக் கூறப்படுகிறது.