முகப்பு
தமிழ்நாடு

காவிரி மேலாண்மை வாரியம்: பிரதமரிடம் வலியுறுத்தப்படும்

புதுச்சேரிக்கு வரும் பிரதமர் மோடியிடம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்துவோம் என்று புதுவை முதல்வர் வே.நாராயணசாமி தெரிவித்தார்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:19 PM
பகிர்:

புதுச்சேரிக்கு வரும் பிரதமர் மோடியிடம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்துவோம் என்று புதுவை முதல்வர் வே.நாராயணசாமி தெரிவித்தார்.
புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு வியாழக்கிழமை அவர் அளித்த பேட்டி:
புதுச்சேரிக்கு வருகிற 25-ஆம் தேதி வரும் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அப்போது, புதுவையின் வளர்ச்சிக்குத் தேவையான திட்டங்கள், மத்திய அரசு புதுவைக்கு இதுவரை வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ஆகியவற்றை வழங்கும்படி கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரிக்கு வரும் பிரதமர் மோடியிடம், காவிரி நீர் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று புதுவை மாநிலம் சார்பில் வலியுறுத்துவோம் என்றார் நாராயணசாமி.
 

முழு கட்டுரையைப் படிக்க →