தமிழ்நாடு

கடலூர், விழுப்புரம் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் அறிவிப்பு

தினமணி

கடலூர், விழுப்புரம் மாவட்டங்களுக்கான ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
 நடிகர் கமல்ஹாசனைத் தொடர்ந்து ரஜினிகாந்தும் தீவிர அரசியல் களத்துக்கு தயாராகி வருகிறார். இதன் முதற்கட்டமாக மாவட்டம் மற்றும் நகர, ஒன்றிய அளவில் நிர்வாகிகளை நியமிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக கடலூர், விழுப்புரம் மாவட்டங்களுக்கான நிர்வாகிகளை நியமிப்பது தொடர்பாக கடந்த இரு நாள்களாக சென்னையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வந்தது.
 இதையடுத்து கடலூர், விழுப்புரம் மாவட்டங்களுக்கான நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்ட அமைப்பு மற்றும் அதில் உள்ள கடலூர், அன்னகிராமம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னார்கோயில், கீரப்பாளையம் , பரங்கிப்பேட்டை, விருத்தாசலம், நெல்லிக்குப்பம், , சிதம்பரம் உள்ளிட்ட நகர, ஒன்றிய அமைப்புகளுக்கு நிர்வாகிகள்அறிவிக்கப்பட்டுள்ளனர்.
 விழுப்புரம் மாவட்டத்துக்கு: இதேபோல் விழுப்புரம் மாவட்ட அமைப்பு மற்றும் திருவெண்ணைநல்லூர், கோலியனூர், திண்டிவனம், கண்டமங்கலம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட நகர, ஒன்றிய அமைப்புகளுக்கு நிர்வாகிகள்அறிவிக்கப்பட்டுள்ளனர். இதே போல் இளைஞர் அணி, மகளிர் அணி, வழக்கறிஞர் அணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளுக்கு நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறுமியை திருமணம் செய்தவா் கைது

இடஒதுக்கீட்டை மோடி பறித்துவிடுவாா்: ராகுல் பிரசாரம்

திருவள்ளூா்: 3165 போ் நீட் தோ்வு எழுதினா்

வேலூா் தொகுதியில் வாக்குப்பதிவின்போது எந்த தவறும் நடக்கவில்லை: திமுக வேட்பாளா் டி.எம்.கதிா்ஆனந்த்

பெங்களூரில் இருந்து கடத்தி வரப்பட்ட 181 கிலோ போதைப்பொருள்கள் பறிமுதல்

SCROLL FOR NEXT