தமிழ்நாடு

குமரி விவேகானந்தர் மண்டபம்: கடந்த ஆண்டில் 21.3 லட்சம் பயணிகள் வருகை

DIN

கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவுமண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையைக் காண கடந்த 2017 ஆம் ஆண்டில், 21.3 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு, நம் நாட்டில் மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் வந்து செல்கின்றனர். சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனம் இரண்டையும் தெளிவாகப் பார்க்கலாம் என்பதால், சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.
மேலும், கடலின் நடுவே இருவேறு பாறைகளில் விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியன பயணிகளைக் கவரும் வகையில் அமைந்துள்ளன. 
கன்னியாகுமரிக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகள் இவற்றை நேரில் பார்த்து ரசிக்கும் வகையில், தமிழக அரசின் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழக நிர்வாகம் சார்பில், 'எம்.எல். குகன்', 'எம்.எல். விவேகானந்தா', 'எம்.எல். பொதிகை' ஆகிய மூன்று படகுகள் காலை 8 மணிமுதல் மாலை 4 மணிவரை இடைவெளியின்றி இயக்கப்பட்டு வருகின்றன.
கடந்த ஆண்டு (2017) ஜனவரி மாதம் முதல் டிசம்பர் வரையிலான 12 மாதங்களில் மட்டும் 21.3 லட்சம் சுற்றுலாப் பயணிகள் இந்த இடத்தைப் பார்வையிட்டுள்ளனர். 2016 இல் 20.48 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். 2016 ஆம் ஆண்டைக்காட்டிலும், 2017 இல் 82 ஆயிரம் பேர் அதிகமாகவும், 2017 மே மாதம் மட்டும் அதிகபட்சமாக 2.59 லட்சம் பேரும் இங்கு வந்து பார்வையிட்டுள்ளதாக, பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

9-ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

ஐஏஎஸ் தோ்வில் வென்றவருக்கு என்.ஐ. உயா்கல்வி மையம் சாா்பில் பாராட்டு

சூரியன்விளை பத்ரகாளி கோயிலில் நட்சத்திர மகா யாகம்

சட்ட தன்னாா்வல தொண்டா் பணிக்கு மே 20-க்குள் விண்ணப்பிக்கலாம்

தோவாளை - தாழக்குடி இடையே சாலைப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT