தமிழ்நாடு

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 9 பேர் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கம்

DIN

டிடிவி தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 9 பேர் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் அபார வெற்றிபெற்றதைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் பலர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு வருகிறனர். தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டப் பேரவை உறுப்பினர்களின் கட்சி பொறுப்புகள் பறிக்கப்பட்டு வருகின்றன.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கை:-எம்.கோதண்டபாணி (காஞ்சிபுரம் மத்திய மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர்), ஜெயந்தி பத்மநாபன் (வேலூர் மேற்கு மாவட்ட மகளிர் அணி பொருளாளர் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்), வி.டி.கலைச்செல்வன் (விருத்தாசலம் நகரச் செயலாளர்), கே.கதிர்காமு (தேனி மாவட்ட மருத்துவ அணி துணைத் தலைவர்), எதிர்கோட்டை எஸ்.ஜி.சுப்பிரமணியன் (விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றியச் செயலாளர்), எஸ்.மாரியப்பன் கென்னடி (சிவகங்கை மாவட்ட மாணவர் அணி துணைத் தலைவர்), எஸ்.முத்தையா (ராமநாதபுரம் மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர்), ஆர்.சுந்தரராஜ் ( தூத்துக்குடி மாவட்ட அண்ணா தொழிற்சங்க துணைச் செயலாளர்), கு.உமாமகேஸ்வரி (தூத்துக்குடி மாவட்டம், 
விளாத்திகுளம் ஒன்றிய இணைச் செயலாளர்) ஆகியோர் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT