தமிழ்நாடு

கனிமொழி பிறந்த நாள்: குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து

DIN

மாநிலங்களவைத் திமுக குழுத் தலைவர் கனிமொழி பிறந்தநாளையொட்டி, அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திரமோடி, திமுக தலைவர் கருணாநிதி உள்பட பலர் வாழ்த்துத் தெரிவித்தனர்.
கனிமொழி தனது 50-ஆவது பிறந்த நாளை வெள்ளிக்கிழமை கொண்டாடினார். அதையொட்டி கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியைச் சந்தித்து கனிமொழி வாழ்த்து பெற்றார். ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள இல்லத்தில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினையும் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். 
பிரதமர் வாழ்த்து: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையாநாயுடு, 
மாநிலங்களவைத் துணைத் தலைவர் குரியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா உள்பட பல்வேறு தேசிய தலைவர்கள் கனிமொழிக்கு வாழ்த்துக் கூறினர்.
தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர், முன்னாள் தலைவர் தங்கபாலு, திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமாரும் வாழ்த்துக் கூறினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் ஏன் கூட்டணி வைக்கவில்லை: மம்தா விளக்கம்

2 கட்டத் தேர்தலில் சதமடித்த பாஜக: அமித் ஷா

இந்த வாரம் கலாரசிகன் - 28-04-2024

அளியரோ அளியர் அளி இழந்தோரே!

யாரோ பிரிகிற்பவரே?

SCROLL FOR NEXT