தமிழ்நாடு

குடும்பத்துடன் பொங்கல் விழா கொண்டாடிய போலீஸார்

DIN

வேலூர் மாவட்ட போலீஸார் தங்களது குடும்பத்துடன் பொங்கல் விழாவை வெள்ளிக்கிழமை கொண்டாடினர். இதில் ஆட்சியர் எஸ்.ஏ.ராமன், வேலூர் சரக டிஐஜி வி.வனிதா, மாவட்ட எஸ்.பி. பகலவன் குடும்பத்துடன் பங்கேற்றனர்.
தமிழகம் முழுவதும் தைப்பொங்கல் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. 
இதை முன்னிட்டு, வேலூர் மாவட்டக் காவல் துறை சார்பில் காவலர் பொங்கல் விழா வேலூரிலுள்ள நேதாஜி விளையாட்டு மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
விழாவில் மாவட்ட போலீஸார் தங்களது குடும்பத்துடன் பாரம்பரிய உடையணிந்து கலந்து கொண்டனர். தொடர்ந்து அவர்கள் பானைகளில் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
தொடர்ந்து, குழந்தைள், பெண்கள், காவலர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளும், கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 
விழாவில் ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் டிஐஜி வி.வனிதா, எஸ்.பி. பகலவன் ஆகியோர் தங்களது குடும்பத்துடன் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

SCROLL FOR NEXT