தமிழ்நாடு

கோவை - பழனி இடையே இன்றுமுதல் சிறப்பு ரயில்

DIN

கோவை - பழனி இடையே ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 14) முதல் சிறப்புப் பயணிகள் ரயில் இயக்கப்படும் என்று சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
போத்தனூர் - பொள்ளாச்சி ரயில் பாதை அகலப் பாதையாக மாற்றப்பட்டுள்ள நிலையில், கோவையில் இருந்து பொள்ளாச்சி வழியாக பழனிக்கு ரயில் இயக்க வேண்டும் என்று பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துவந்தனர். இதையடுத்து, கோவை - பழனி இடையே, போத்தனூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை வழியாக சிறப்புப் பயணிகள் ரயில் இயக்கப்படும் என்று கோட்ட மேலாளர் ஹரி சங்கர் வர்மா அறிவித்துள்ளார்.
இந்த ரயில் ஜனவரி 14-ஆம் தேதி முதல் 3 மாதங்களுக்கு சோதனை அடிப்படையில் இயங்கும் என்றும், இதில் 7 முன்பதிவு செய்யப்படாத இரண்டாம் வகுப்பு பெட்டிகளும், 2 சரக்கு, பிரேக் வேன்களும் இணைக்கப்பட்டிருக்கும் என்று ரயில்வே செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், கோவை - பொள்ளாச்சி இடையே இயக்கப்பட்டு வந்த சிறப்புப் பயணிகள் ரயில் (06081-06082) ஞாயிற்றுக்கிழமை முதல் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, மதுரை - பழனி இடையே தற்போது வரை இயக்கப்பட்டு வரும் பயணிகள் ரயிலே (56710-56709) இனி பழனி - கோவை சிறப்பு ரயிலாக 06710 - 06709 என்ற எண்ணில் இயக்கப்பட உள்ளது.
அதாவது, மதுரையில் காலை 7.45 மணிக்குப் புறப்படும் இந்த ரயில், காலை 10.40 மணியளவில் பழனிக்கு வந்தடையும். பின்னர் பழனியில் இருந்து சிறப்புப் பயணிகள் ரயில் எனும் பெயரில் 10.45 மணிக்குப் புறப்பட்டு பிற்பகல் 2 மணிக்கு கோவையை வந்தடையும். அதேபோல, மறுமார்க்கத்தில் பகல் 1.45 மணிக்குப் புறப்படும் இந்த ரயில், மாலை 4.40 மணிக்கு பழனியைச் சென்றடையும். அங்கிருந்து 4.45 மணிக்குப் புறப்பட்டு இரவு 8.10 மணிக்கு மதுரையைச் சென்றடையும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT