தமிழ்நாடு

சொத்துக் குவிப்பு வழக்கு: டிடிவி தினகரன் சகோதரி ஸ்ரீதள தேவி, கணவர் பாஸ்கரனுக்கு பிடி வாரண்ட்! 

DIN

சென்னை: வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக டிடிவி தினகரனின் சகோதரி ஸ்ரீதள தேவி மற்றும் அவரது கணவர் பாஸ்கரனுக்கு பிடி வாரண்ட் பிறப்பித்து சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

டிடிவி தினகரனின் சகோதரி ஸ்ரீதள தேவி மற்றும் அவரது கணவர் பாஸ்கரன் மீது வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.68 கோடி அளவில் சொத்து குவித்ததாக, 1997-ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடுக்கப்பட்டது.  

சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் அவர்கள் இருவருக்கும் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து,சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவினை எதிர்த்து அவர்கள் இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

இந்த மேல்முறையீட்டிலும் அவர்களது தணடனை உறுதி செய்யப்பட்டதுடன் இருவரும் உடனடியாக சிபிஐ நீதிமன்றத்தில் சரணடையுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் இருவரும் ஆஜராகவில்லை.

இதனைத் தொடர்ந்து டிடிவி தினகரனின் சகோதரி ஸ்ரீதள தேவி மற்றும் அவரது கணவர் பாஸ்கரனுக்கு பிடி வாரண்ட் பிறப்பித்து சென்னை சிபிஐ நீதிமன்றம் வெள்ளியன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.     

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT