தமிழ்நாடு

அடுத்த கட்டண உயர்வு இதுவாக இருக்கலாமோ: தயாராகுங்கள் பறக்கும் ரயில் பயணிகளே!

DIN


சென்னை: சென்னை மெட்ரோ ரயில் சேவையுடன், பறக்கும் ரயில் சேவை இணைக்கப்பட்டுவிட்டால், சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையேயான பறக்கும் ரயில் சேவைக்கான கட்டணம் உயர்த்தப்படும் என்று எச்சரிக்கை மணி ஒலிக்கிறது.

அடுத்த நிதியாண்டின் இறுதியில் மெட்ரோ ரயில் சேவையுடன், பறக்கும் ரயில் சேவை இணைப்புப் பணி நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, தற்போதிருக்கும் ரயில் கட்டணத்தை விட 5 அல்லது 7 மடங்கு அளவுக்குக் கட்டணம் உயர்த்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

ஆனால், தற்போதே கட்டண உயர்வு குறித்து கணிப்பது என்பது இயலாது. ஒரு வேளை மெட்ரோ சேவையுடன் இணைக்கப்பட்டால் அதே கட்டணம் பறக்கும் ரயிலுக்கும் நிர்ணயிக்கப்படும் என்று சொல்லலாம் என்கிறார் அதிகாரி ஒருவர்.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அமைந்திருக்கும் பகுதிகளை இணைக்கும் பறக்கும் ரயில் சேவையில் தினந்தோறும் 4,25,000 பேர் பயணிக்கிறார்கள். 18 ரயில் நிலையங்கள் மூலமாக சென்னையின் பல முக்கியப் பகுதிகளை 15 கி.மீ. தூரம் பயணித்து, பொதுமக்களுக்கு பயண நேரத்தைக் குறைக்கிறது. 

இந்த பறக்கும் ரயில் சேவையின் இரண்டாம் கட்டப் பணிகள் முடிவடைந்த பிறகு, மெட்ரோ ரயில் சேவை மற்றும் புறநகர் ரயில் சேவையுடன் இணைக்கும் வகையில் புதிதாக 3 ரயில் நிலையங்கள் உருவாக்கப்படும். தற்போது இந்த திட்டத்தை செயல்படுத்த சட்டப்பூர்வமான நடவடிக்கைகளில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது.

இந்த திட்டத்தை முதலில் மதிப்பிட்டபோது ரூ.605 கோடி செலவாகும் என்று கூறப்பட்டது. ஆனால், தற்போதைய மதிப்புப்படி நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பல செலவுகளையும் உள்ளடக்கி ரூ.919 கோடி செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

இதற்கான நிதி ஒதுக்கப்பட்டு அடுத்த நிதியாண்டின் இறுதியில் இந்த திட்டம் நிறைவடையும் என்று கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

அரபிக் கடலோரப் பகுதிகளில் அதீத அலை: வானிலை மையம் எச்சரிக்கை

மீண்டும் இணைந்த ‘ஜோ’ பட கூட்டணி!

கொல்கத்தா அருகே ஆடை உற்பத்தி நிறுவனத்தில் தீ

சவுக்கு சங்கர் கைது! அழைத்துச் சென்ற வாகனம் விபத்து

SCROLL FOR NEXT