முகப்பு
தமிழ்நாடு

அரசியலில் ரஜினி, கமல் எனக்கு ஜூனியர்: விஜயகாந்த்

உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சித் தலைவரும், பொதுச்செயலாளருமான விஜயகாந்த், ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளார்.

Updated On : 21 ஜனவரி, 2018 at 7:31 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 5:32 PM

சிவகாசியில் பட்டாசு தொழிலை பாதுகாக்கக் கோரி தேமுதிக சார்பில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசியதாவது: 

சுற்றுச்சூழல் பாதிக்கிறது எனக்கூறி போகியையும் நிறுத்தினாலும் நிறுத்திவிடுவார்கள். மத்திய அரசின் சட்டத்தால் 8 லட்சம் பட்டாசு தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுற்றுச்சூழல் விதியிலிருந்து பட்டாசுக்கு விலக்கு அளிக்க வேண்டும். சீனப் பட்டாசு இறக்குமதியை முழுமையாக தடை செய்ய வேண்டும்.

Advertisement

உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றால் அதில் தேமுதிக தனித்து போட்டியிடும். அரசியலில் ரஜினியும், கமலும் எனக்கு ஜுனியர்கள். இங்கு நான்தான் சீனியர். 

பேருந்து கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தேமுதிக சார்பில் விரைவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.