தமிழ்நாடு

பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் போராட்டம்

DIN

பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து, திருவண்ணாமலையில் திங்கள்கிழமை அரசுக் கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்துகள், தனியார் பேருந்துகளில் கட்டண உயர்வு அண்மையில் அமலுக்கு வந்தது. இந்தக் கட்டண உயர்வால் நடுத்தர, ஏழை மக்களைப் பெரிதும் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 
இந்த நிலையில், திருவண்ணாமலை அரசு கலை - அறிவியல் கல்லூரியில் பயிலும் 1,500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் திங்கள்கிழமை காலை வகுப்புகளைப் புறக்கணித்து கல்லூரி எதிரே திரண்டனர். பின்னர், இந்திய மாணவர் சங்கம் சார்பில் தமிழக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, பேருந்துக் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று அவர்கள் முழக்கமிட்டனர்.
சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் முடிவில் மாணவ-மாணவிகள் வகுப்புகளைப் புறக்கணித்து அவரவர் வீடுகளுக்குச் சென்றனர்.
விழுப்புத்தில்... விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் திங்கள்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 
காலையில் கல்லூரிக்கு வந்த மாணவர்கள், பேருந்துக் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற கோரிக்கை விடுத்து, கல்லூரி வளாகத்தில் திரண்டு உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
கிருஷ்ணகிரியில்... கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக் கல்லூரி மாணவர்கள், வகுப்பு புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். வகுப்புகளை புறக்கணித்த மாணவ, மாணவியர், 
கல்லூரி நுழைவுவாயில் அருகே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரில் தீவிரவாத அமைப்புத் தலைவர் சுட்டுக்கொலை

வேலூரில் தூய்மைப் பணியாளர் மீது மோதிய இருசக்கர வாகனம்: மரித்துப்போனதா மனிதம்?

வெப்பத்தின் பிடியில் சிக்கிய ராஜஸ்தான்!

ஓ மை ரித்திகா!

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடையலங்கார அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

SCROLL FOR NEXT