தமிழ்நாடு

சிபிஎஸ்இ-க்கு இணையாக தமிழ் வழி பயிலும் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்படுகிறதா?: நீட் வழக்கில்   உயர் நீதிமன்ற   கிளை கேள்வி   

DIN

மதுரை: சிபிஎஸ்இ-க்கு இணையாக தமிழ் வழி பயிலும் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்படுகிறதா என்று நீட் தேர்வு மதிப்பெண்கள் தொடாபான வழக்கில் மதுரை உயர் நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பியுள்ளது. 

தமிழ் வழி நீட் கேள்வித்தாளில் இருந்த  குழப்பங்கள் காரணமாக தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்குவது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு திங்ககளன்று  மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீட் தேர்வினை நடத்தும் சிபிஎஸ்இக்கு நீதிபதிகள் சில  கேள்விகளை எழுப்பி உள்ளனர். அவையாவன:

பொதுவாக நீட் வினாத்தாள் கேள்விகள் எந்த ஆங்கில அகராதியில் இருந்து எடுக்கப்படுகிறது?  நீட் வினாத்தாள் எதன் அடிப்படையில் தமிழில் மொழி மாற்றம் செய்யப்படுகிறது? . தமிழ் வழி பயிலும் மாணவர்களுக்கு ஒரு குறிப்பிட ஆங்கில வார்த்தை  தமிழில் மொழி மாற்றம் செய்யப்படும் போது, என்ன வார்த்தை என்று மாணவர்களுக்கு முன்னரே கற்று கொடுக்கபட்டுள்ளதா?

கல்வி என்பது அனைவருக்கு சமமாக இருக்க வேண்டும். சிபிஎஸ்இ-க்கு இணையாக, தமிழ் வழி பயிலும் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்படுகிறதா? 

இவ்வாறு கேள்விகளை எழுப்பிய உயர் நீதிமன்ற கிளையானது அனைத்து மாணவர்களுக்கும் சமமான போட்டி தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று அறிவுரை வழங்கி, வழக்கு விசாரணையை ஜூலை 6 ம் தேதிக்கு ஒத்தி வைத்தது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வளா்ப்பு நாய்கள் கடித்து சிறுமி பலத்த காயம்: உரிமையாளா் உள்பட 3 போ் கைது

கடலூா் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் வெப்ப நோய் சிகிச்சைப் பிரிவு தொடக்கம்

பைக் மீது காா் மோதல்: மூவா் காயம்

முதியவா் சடலமாக மீட்பு

பாரதிதாசன் மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

SCROLL FOR NEXT