தமிழ்நாடு

கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவர் சிலை: தமிழ்த்தாய் அறக்கட்டளை வழங்குகிறது

DIN

இலங்கையில் உள்ள கொழும்புத் தமிழ்ச் சங்கத்துக்கு மூன்றரை அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலை தஞ்சாவூர் தமிழ்த்தாய் அறக்கட்டளை சார்பில் வழங்கப்படவுள்ளது.
தஞ்சாவூர் தமிழ்த்தாய் அறக்கட்டளை சார்பில் பல்வேறு இடங்களில் நிறுவ திருவள்ளுவர் சிலை அன்பளிப்பாக வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில், இலங்கையில் உள்ள கொழும்புத் தமிழ்ச் சங்கத்துக்கு மூன்றரை அடி உயரம் கொண்ட திருவள்ளுவர் சிலை அன்பளிப்பாக வழங்கப்படவுள்ளது.
இச்சிலைத் திறப்பு விழா வரும் செப்டம்பர் 22-இல் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு திருக்குறள் ஆய்வு தொடர்பான பன்னாட்டுக் கருத்தரங்கமும் நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள யாழ் நூலகத்துக்கு 25,000 தமிழ்ப் புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்படவுள்ளன.
இந்நிகழ்வுகளில் பங்கேற்க இந்தியாவிலிருந்து தமிழறிஞர்களும், தமிழ் அமைப்பினரும், பேராசிரியர்களும், மாணவர்களும் இலங்கை செல்கின்றனர். அதைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் பல்கலைக் கழகம், முல்லைத் தீவு, வவுனியா, திருகோணமலை, தலைமன்னார், கண்டி, பேராதணைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு தமிழ் இலக்கியப் பயணம் மேற்கொள்கின்றனர்.
திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்ள விரும்புவோர், பன்னாட்டுக் கருத்தரங்குக்கு கட்டுரை அனுப்புவோர், யாழ் நூலகத்துக்கு புத்தகம் அன்பளிப்பாக வழங்க முன்வருவோர், பொதுச் செயலாளர், தமிழ்த்தாய் அறக்கட்டளை, மாரியம்மன்கோயில், தஞ்சாவூர் 613501 என்ற முகவரியிலும், 75300 02454, 94439 38797 ஆகிய செல்லிடப்பேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என்று திருவள்ளுவர் சிலை அமைப்புக் குழு நிர்வாகிகள் துரை.இராசமாணிக்கம், உடையார்கோயில் குணா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

அரசுப் பேருந்துகளில் சோதனை நிறைவு

ஆசிரியா்களுக்கு 30 நாள்களில் ஓய்வூதிய பலன்: கல்வித் துறை உத்தரவு

SCROLL FOR NEXT