தமிழ்நாடு

யானைகள் வழித்தடம்: செயல் திட்டத்தை அளிக்க நீலகிரி ஆட்சியருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

DIN

யானைகள் வழித்தடம் ஆக்கிரமிப்பு விவகாரம் தொடர்பாக செயல் திட்ட அறிக்கையை தாக்கல் செய்யுமாறு நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
நீலகிரி மாவட்டம், முதுமலை சரணாலயத்தை ஒட்டியுள்ள மசினகுடி கிராமத்தில் யானைகள் வழித்தடம் ஆக்கிரமிக்கப்பட்டு விடுதி, உணவகங்கள் உள்ளிட்டவை கட்டப்படுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2011-ம் ஆண்டு தடை விதித்தது. 
மேலும், யானைகள் வழித்தடம் என வரையறுக்கப்பட்ட பகுதிகளில் இருந்து விவசாய நில உரிமையாளர்கள், விடுதி உரிமையாளர்கள் தங்கள் குடியிருப்புகளை காலி செய்து, அவற்றறை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து பாதிக்கப்பட்டோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு, நாடு முழுவதும் யானைகள் வழித்தடத்தில் கட்டுமானப் பணிக்குத் தடை கோரி, ரங்கராஜன் என்பவர் தாக்கல் செய்த வழக்குடன் சேர்த்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மதன் பி லோகூர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆத்மாராம் என்.எஸ். நத்கர்னி ஆஜராகி, யானைகள் வழித்தடம் தொடர்பாக கடந்த 5 மாநிலங்கள் மட்டுமே பதில் அளித்துள்ளன' என்றார். அப்போது நீதிபதிகள், அப்படியென்றால், பதில் அளிக்காத பிற மாநிலங்களை என்ன செய்வது?' என வினவினர்.
இதையடுத்து, யானைகள் வழித்தடம் தொடர்பாக ஏற்கெனவே விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது' என்று இந்த வழக்கில் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்குரைஞர் ஏ.டி.என். ராவ் தெரிவித்தார். 
அப்போது மனுதாரர்களில் ஒருவரான யானை ராஜேந்திரன் குறுக்கிட்டு, நீலகிரி மாவட்டத்தில் சுமார் 400-க்கும் மேற்பட்ட கட்டடங்கள், யானைகள் வழித்தடத்தில் சட்ட விரோதமாக ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன' என்றார். 
தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ராஜு ராமச்சந்திரன், வழக்குரைஞர் யோகேஷ் கண்ணா ஆகியோர், விதிகளின்படியே தமிழகத்தில் யானைகள் வழித்தடம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணைக்கு எதிராகவே உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றமும் தமிழக அரசாணையை சரி எனக் கூறிவிட்டது. ஆனால், அந்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது' என்றனர். 
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,யானைகள் வழித்தடம் தொடர்பாக அறிக்கை அளிக்காத மாநிலங்கள் அடுத்த விசாரணை நாளுக்குள் அறிக்கை அளிக்க வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் அறிவிக்கப்பபட்டுள்ள யானை வழித்தடம் குறித்த செயல் திட்டத்தை அந்த மாவட்ட ஆட்சியர் 4 வாரங்களுக்குள் எழுத்துப்பூர்வமான அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும்' எனத் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

SCROLL FOR NEXT