தமிழ்நாடு

உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான தகுதிப் பட்டியல் வெளியீடு

DIN

உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு வெளியிடப்பட்ட நிலையில், அதற்கான தகுதிப் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளான டி.எம்., எம்.சிஎச் ஆகிய படிப்புகளுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் 1,215 இடங்கள் உள்ளன. தமிழகத்தில் 192 இடங்கள் உள்ளன. 
இந்த இடங்களுக்கு 2018 - 19 -ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் ஜூலை 6 -ஆம் தேதி நடைபெற்றது. தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம், திருநெல்வேலி ஆகிய இடங்கள் உள்பட நாடு முழுவதும் 42 நகரங்களில் தேர்வு நடைபெற்றது. தேர்வு முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டன.
அதனைத் தொடர்ந்து நரம்பியல், நரம்பியல் அறுவைச் சிகிச்சை, அறுவைச் சிகிச்சை புற்றுநோய், மருத்துவப் புற்றுநோய், இதயவியல் உள்ளிட்ட 31 உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான தகுதிப் பட்டியல் தனித்தனியே வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தேர்வுக்கான தேர்ச்சி மதிப்பெண் 35 சதவீதமாகும். தேர்ச்சி மதிப்பெண்ணின் அடிப்படையில்  www.nbe.edu.in  இணையதளத்தில் தகுதிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 
தகுதிப் பட்டியலின் அடிப்படையில் மத்திய சுகாதார சேவைகள் இயக்ககம் (டிஜிஹெச்எஸ்) கலந்தாய்வை நடத்த உள்ளது. கலந்தாய்வு அட்டவணை உள்ளிட்ட விவரங்கள் ம்ஸ்ரீஸ்ரீ.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நேரத்தை மிச்சப்படுத்தும் ஏஐ : 94% பணியாளர்களின் கருத்து என்ன?

சென்னை-நாகர்கோவில் சிறப்பு ரயில் 19 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

ஆயிரம்விளக்கு அருகே பூங்காவில் சிறுமியை கடித்த வளர்ப்பு நாய்கள்

ரே பரேலியில் காங்கிரஸ் தொண்டர்களைச் சந்திக்கிறார் பிரியங்கா

ஏற்காட்டுக்கு சென்ற நடிகர்கள் பட்டாளம்: காரணம் என்ன?

SCROLL FOR NEXT