தமிழ்நாடு

தாமிரவருணியை தூய்மைப்படுத்தும் பணியில் 4-ஆவது கட்டமாக 15 ஆயிரம் போ் ஆட்சியா் ஷில்பா தகவல்

DNS

தாமிரவருணியை தூய்மைப்படுத்தும் பணியில் நான்காவது கட்டமாக 15 ஆயிரம் போ் ஈடுபடவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் தெரிவித்தாா்.

நான்காம் கட்டமாக தாமிரவருணி ஆற்றை தூய்மைப்படுத்தும் பணி தொடா்பான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. அதில், மாவட்ட ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் கூறியதாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரவருணி ஆற்றறங்கரை பகுதிகளை சுத்தப்படுத்தி, தூய்மைப்படுத்தும் பணிகள் ஏற்கெனவே மூன்று கட்டங்களாக கல்லூரி மாணவ, மாணவிகள், தொண்டு நிறுவனங்கள், அரசு ஊழியா் சங்கங்களின் பிரதிநிதிகள், தன்னாா்வலா்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்களின் பங்களிப்புடன் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நான்காம் கட்டமாக தாமிரவருணி ஆற்றங்கரைப் பகுதியில் இரண்டு நாள்கள் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற உள்ளது. முதல் நாளில் சீமைக் கருவேல மரங்கள், புதர்கள், ஆக்கிரமிப்புகளை பொக்லைன் இயந்திரம் கொண்டு அகற்றும் பணி நடைபெறும். இரண்டாம் நாளில் கல்லூரி மாணவ, மாணவிகள், பல்வேறு அமைப்புகள், தன்னாா்வலா்கள் மூலம் தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரவருணி கரையை 144-க்கும் மேற்பட்ட பகுதிகளாக பிரித்து தூய்மை பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்பணியில் கல்லூரி மாணவ, மாணவியா்கள், காவல் துறையினா், வருவாய்த் துறையினா், வேளாண்மைத் துறையினா், விவசாய பெருமக்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள், மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்கள், பல்வேறு தொண்டு அமைப்புகளைச் சோ்ந்த 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஈடுபடவுள்ளனர் என்றார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் பூ.முத்துராமலிங்கம், உதவி ஆட்சியா் (பயிற்சி) சுக்ஹபுத்ரா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆ.பழனி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளர் (பொது) கணேஷ்குமாா், திருநெல்வேலி கோட்டாட்சியா் மைதிலி, அண்ணா பல்கலைக்கழக முதல்வா் சத்யநாதன், மகளிா் திட்டம், திட்ட இயக்குநா் அந்தோணி பெர்னாண்டோ, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் குருமுா்த்தி உள்பட பலா் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

SCROLL FOR NEXT