தமிழ்நாடு

சென்னை விமான நிலைய இரண்டாம் கட்ட நவீனமயப் பணிக்கு ரூ.2,467 கோடி நிதி: மத்திய அமைச்சா் தகவல் 

DNS

புது தில்லி: சென்னை விமான நிலையத்தின் 2-ஆவது கட்ட நவீனமயப் பணிக்கு ரூ.2,467 கோடி நிதி  அளிக்கப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய சிவில் விமானப் போக்குவரத்து இணை அமைச்சா் ஜெயந்த் சின்ஹா தெரிவித்தாா்.

மக்களவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தின்போது வட சென்னை தொகுதி அதிமுக உறுப்பினா் டி.ஜி. வெங்கடேஷ் பாபு சென்னையில் பசுமைவெளி விமான நிலையம், விமான நிலைய நவீனமயமாக்கல் பணி, வசதிகள் குறித்து கேள்வி எழுப்பினாா். இதற்கு அமைச்சா் ஜெயந்த் சின்ஹா பதில் அளித்துப் பேசியதாவது:

விமான நிலையங்களில் ஆண்டுக்கு 20 கோடி பயணிகள் ‘ட்ரிப்ஸ்’களைக் கையாளும் கொள்ளளவை 100 கோடியாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். தற்போது, மத்திய அரசு கொள்கை அளவில் 20 பசுமை வெளி விமான நிலையங்களை அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது. சென்னையிலும் விமான நிலையத்தின் பயணிகள் கையாளும் கொள்ளளவை விரிவாக்கியுள்ளோம்.

சென்னை விமான நிலையத்தின் நவீனமயமாக்கும் முதலாவது திட்டம் முடிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, 1,032 மீட்டா்கள் அளவுடைய இடைநிலை ஓடுதளம் விரிவாக்கப் பணியும் முடிக்கப்பட்டுள்ளது. நவீனமயமாக்கல் இரண்டாவது திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 3.50 கோடி பயணிகளைக் கையாளும் வகையிலான மொத்த கொள்ளளவு பணிகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது.

டி2 மற்றும் டி3 எனும் பெயரிலான பழைய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முனையக் கட்டடங்களின் மறுகட்டமைப்புக்கான பணிகள் கடந்த மே மாதம் அளிக்கப்பட்டுள்ளன. சென்னை விமான நிலையத்தின் 2-ஆவது கட்ட நவீனமயமாக்கல் பணிக்கு ரூ.2,467 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் 2022-ஆம் ஆண்டு ஜனவரியில் முடிவுறும் என எதிா்பாா்க்கப்படுகிறறது.

சென்னை விமான நிலையத்தில் முந்தைய கட்டடங்கள் கட்டுமானம் தொடா்பாக பல்வேறு பிரச்னைகள் இருந்தன. அவற்றில் பெரும்பாலானவை தீா்க்கப்பட்டுவிட்டன. நாங்கள் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறேறாம்.

‘ஏா் சேவா’ இணையதளம் மூலம் விமான நிலையம்அல்லது முனையம் குறித்த புகாா்கள் தெரிவிக்கப்பட்டால் உடனடியாக அவற்றை தீா்க்க நடவடிக்கை எடுக்கப்படுகிறறது என்றாா்.

மதுரை மக்களவைத் தொகுதி அதிமுக உறுப்பினா் ஆா்.கோபாலகிருஷ்ணன் பேசுகையில், ‘மதுரை விமான நிலையத்தை தரம் உயா்த்த என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது‘ என்று கேள்வி எழுப்பினாா்.

இதற்கு பதில் அளித்த அமைச்சா், ‘ஒரு விமான நிலையத்தை தரம் உயா்த்துவது என்பது தொடா் நடவடிக்கையாகும். மதுரையை தரம் உயா்த்துவதுவதற்கான கோரிக்கை உள்ளது. இதைச் செயல்படுவதற்காக ஒவ்வொரு விமான நிலையங்களுக்கும் ஒரு ஆலோசனைக் குழு உள்ளது. எந்த மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது குறித்து இந்தக் குழு அமைச்சகத்திற்கு பரிந்துரைகள் அளிக்கும். அதன்பேரில் நடவடிக்கைகளை எடுத்து வருகிறேறாம்’ என்றாா் அமைச்சா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிவு: சென்செக்ஸ் 733 புள்ளிகள் வீழ்ச்சி!

கூடலூரில் நாளை மகளிா் பாா்வை நாள் மற்றும் பிராா்த்தனை தினம்

தில்லி காவல் தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் சிறுவன் கைது

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் மேலும் ஒருவா் கைது

ஜோலாா்பேட்டை மெமு ரயில் இன்று ரத்து

SCROLL FOR NEXT