தமிழ்நாடு

ஆதார் அட்டை வைத்திருந்தால் மட்டுமே இந்தியராகக் கருத முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

தினமணி

ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை வைத்திருப்பதால் மட்டுமே ஒருவரை இந்திய குடிமகனாகக் கருத முடியாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 சென்னை உயர் நீதிமன்றத்தில் திவ்யா என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: இலங்கை யாழ்ப்பாணத்தில் பிறந்தவர் எனது தாயார் ஜெயந்தி. இலங்கையில் நடந்த போரின் காரணமாக இந்தியாவுக்கு வந்த எனது தாய்-தந்தையர் திருமணம் கடந்த 1992-ஆம் ஆண்டு நடந்தது. எனது தாயார் இந்தியர் என்பதற்கான சான்றாக ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட அனைத்துச் சான்றுகளும் உள்ளன.
 எனது தாயார் இத்தாலியிலிருந்து பணியின் காரணமாக இந்தியாவுக்கு வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் கடந்த ஜூலை 1-ஆம் தேதி சட்டவிரோதமாக இந்தியா வந்துள்ளதாகக் கூறி எனது தாயாரை சென்னை விமான நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர். எனவே, அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ள எனது தாயாரை விடுவித்து அவர் மீண்டும் இத்தாலி செல்ல அனுமதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.
 இந்த மனு நீதிபதி டி.ராஜா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், இலங்கையைச் சேர்ந்த ஜெயந்தியின் இலங்கை கடவுச்சீட்டு கடந்த 1994-ஆம் ஆண்டு காலாவதியாகிவிட்டது. பின்னர் அவர் இந்தியாவில் மோசடியாக கடவுச் சீட்டு பெற்றுள்ளார். இதன் காரணமாகவே ஜெயந்தியை விமான நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
 இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் வைத்துள்ளதால் மட்டும் ஒருவர் இந்திய குடிமக்களாகி விட முடியாது, அரசு அங்கீகரிக்க வேண்டும். ஜெயந்தி இலங்கை குடிமகள் எனக்கூறி அந்த நாடு அவருக்கு கடவுச்சீட்டு வழங்கி உள்ளது. எனவே, அவரை விடுவிக்க உத்தரவிட முடியாது எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எவரெஸ்ட் பயணத்தில் ஜோதிகா!

ஜூன் 1-ல் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்?

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

ஆவடி அருகே படுகொலை: வட மாநில இளைஞரின் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம்

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

SCROLL FOR NEXT