தமிழ்நாடு

பிராமணர் அல்லாத அர்ச்சகர்: தமிழகத்திலும் சாத்தியமாகிவிட்டது

DIN

பிராமணர் அல்லாத ஒருவரை கோயில் அர்ச்சகராக தமிழக அறநிலையத்துறை நியமித்துள்ளது. 

தீண்டாமை மற்றும் சமூக பாகுபாடுகளை ஒழிக்க பெரியாருடைய திராவிட இயக்கம் மொழிந்த சமூக மாற்றங்களுள் மிக முக்கியமான ஒன்று அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்பது. இதை நடைமுறைக்கு கொண்டுவருவேன் என்று 1970-இல் முதல்வராக இருந்தபோது  கருணாநிதி உறுதியளித்தார்.

அதன்பிறகு, 2006-இல் கருணாநிதி மீண்டும் முதல்வரான போது பிராமணர் அல்லாதவர் அர்ச்சகராகலாம் என்ற உத்தரவை பிறப்பித்தார். அதற்காக, 206 பேருக்கு அர்ச்சகராகுவதற்கான பயிற்சி அளிக்கப்பட்டது. 

ஆனால், இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு மீதான நீண்ட விசாரணைக்குப் பிறகு உச்ச நீதிமன்றம் 2015-இல் தீர்ப்பு வழங்கியது. 

அதில், "பிராமணர் அல்லாதவரும் அர்ச்சகராகலாம். ஆனால், அவர்கள் ஆகம விதிகளுக்கு உட்பட்டே நியமிக்கப்பட வேண்டும்" என்ற உத்தரவை பிறப்பித்தது. 

அதனால்,  அர்ச்சகர் ஆவதற்கு பயிற்சி மேற்கொண்ட 206 பேருக்கும் பணி நியமனம் வழங்கப்படாத நிலை 10 வருடங்களாக இருந்து வந்தது. இதற்கிடையில், கேரள மாநிலம் பிராமணர் அல்லாத 36 பேரை அர்ச்சகராக நியமித்து கவனம் ஈர்த்தது. 

இந்நிலையில், தமிழகத்திலும் பிராமணர் அல்லாத ஒரு நபர் அறநிலையத்துறையால் அர்ச்சகராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர், 10 வருடங்களுக்கு முன்பு பயிற்சி பெற்ற 206 பேரில் இவரும் ஒருவர். அந்த 206 பேரில் இவர் ஒருவர் மட்டுமே அர்ச்சகராக நியமிக்கப்பட்டுதால் செய்திகள் வெளியாகவில்லை. 

இவர், 5 மாதங்களுக்கு முன்பு மதுரையில் உள்ள கோயிலில் அர்ச்சகராக நியமிக்கப்பட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

SCROLL FOR NEXT