தமிழ்நாடு

கருணாநிதியை நலம் விசாரித்து இலங்கை அதிபர் கடிதம் - ஸ்டாலினிடம் வழங்கி இலங்கை எம்பி நலம் விசாரிப்பு

DIN

காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் கருணாநிதி நலம்பெற இலங்கை அதிபர் மைத்ரிபால சிரிசேனா கடிதம் எழுதி எம்பி மூலம் அனுப்பியுள்ளார். 

திமுக தலைவர் கருணாநிதி, ரத்த அழுத்த குறைபாடு காரணமாக சனிக்கிழமை அதிகாலை 1.30 மணிக்கு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து, மாநிலம் மட்டுமின்றி தேசிய அளவிலான அரசியல் தலைவர்கள் தொடர்ச்சியாக காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்து கருணாநிதியின் உடல் நலம் குறித்து நலம் விசாரித்து செல்கின்றனர்.    

இந்த வரிசையில், இலங்கை அதிபர் மைத்ரிபால சிரிசேனாவும் கருணாநிதியின் உடல்நலம் குறித்து கடிதம் மூலம் நலம் விசாரித்துள்ளார். இந்த கடிதத்தை இலங்கை எம்பி ஆறுமுகன் தொண்டமான் காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்து ஸ்டாலினிடம் வழங்கினார். இதையடுத்து, அவரும் கருணாநிதியின் உடல் நலம் குறித்து ஸ்டாலினிடம் நலம் விசாரித்தார். 

இலங்கை அதிபர் அந்த கடிதத்தில், "கருணாநிதி விரைவில் குணமடைந்து மீண்டும் மக்கள் பணிகளை தொடர வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயலக தமிழர்கள் பதிவு செய்ய அழைப்பு

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

SCROLL FOR NEXT