தமிழ்நாடு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: இன்று பிற்பகல் விசாரணை தொடங்குகிறார் அருணா ஜெகதீசன்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் இன்று பிற்பகல் விசாரணையை தொடங்குகிறார்.

DIN

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த மக்கள் போராட்டத்தில் காவல்துறையால் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதுகுறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இவர், இந்த விசாரணையை இன்று (திங்கள்கிழமை) தொடங்க இருப்பதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. 

அதன்படி அருணா ஜெகதீசன் இன்று தூத்துக்குடி சென்றடைந்தார். அவர், முதலில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியை சந்தித்தார். இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை அதிகாரிகள் ஆகியோருடன் அவர் ஆலோசனை நடத்தினார்.  

இந்த விவகாரம் குறித்தான விசாரணையை அருணா ஜெகதீசன் இன்று பிற்பகல் தொடங்க இருக்கிறார். இவர் முதற்கட்டமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு

ள்ள துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களை சந்தித்து விசாரணையை தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. 

இந்த விசாரணை 2 மாத காலத்துக்குள் நிறைவடைந்து, அந்த அறிக்கை தமிழக அரசிடம் சமர்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை! | செய்திகள்: சில வரிகளில் | 4.11.25

நியூயார்க்கின் முதல் முஸ்லிம் மேயராகும் ‘ஸோரான் மம்தானி’?

சினேகிதியே... அதுல்யா ரவி!

கோவை பாலியல் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை: சி.பி. ராதாகிருஷ்ணன்

அமைதிக்கும் குழப்பத்துக்கும் இடையே சென்னையில் எங்கோ ஓரிடத்தில்... ஆஷ்னா ஜவேரி!

SCROLL FOR NEXT