தமிழ்நாடு

கருணாநிதியை நேரில் சந்தித்தார் பொன்.ராதாகிருஷ்ணன்

திமுக தலைவர் கருணாநிதியின் 95-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

DIN

திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஞாயிற்றுக்கிழமை 95-ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். அவருடைய பிறந்தநாளுக்கு நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர். அதில், பாஜக-வின் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் வாழ்த்து தெரிவித்தார். 

இதையடுத்து, அவர் நேற்று (திங்கள்கிழமை) கருணாநிதியின் சென்னை கோபாலபுரம் இல்லத்தில் அவரை நேரில் சந்தித்தும் வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது திமுக மாநிலங்களவை குழுத் தலைவர் கனிமொழியும் உடனிருந்தார். 

இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன் கூறுகையில், 

"கருணாநிதியின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் தமிழகம் மட்டுமில்லாது இந்தியாவிலேயே மூத்த அரசியல்வாதி. சிறந்த பேச்சாளர், எழுத்தாளர்" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT