அந்தியோதயா ரயிலை குமரி வரை நீட்டிக்க கோரிக்கை
தாம்பரம் - திருநெல்வேலி இடையே இயக்கப்படும் அந்தியோதயா ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தாம்பரம் - திருநெல்வேலி இடையே இயக்கப்படும் அந்தியோதயா ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
அதன்விவரம்:
திருநெல்வேலியில் இருந்து மதுரை வழியாக சென்னை தாம்பரத்துக்கு தினசரி செல்லத்தக்க வகையில் அந்தியோதயா ரயில் கடந்த ரயில்வே கால அட்டவணையில் அறிவிக்கப்பட்டது.
அதேபோல, கொச்சுவேலி - மங்களூருக்கு வாரத்துக்கு இரண்டு நாள், செங்கோட்டை- சென்னைக்கு தினசரி சேவையுமாக அந்தியோதயா ரயில்கள் அறிவிக்கப்பட்டன.
இந்த ரயில்களில், ஒன்றுகூட குமரி மாவட்டத்துக்கு செல்லவில்லை. எனவே தாம்பரம் - திருநெல்வேலிக்கு இயக்கப்படும் அந்தியோதயா ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.