முகப்பு
தமிழ்நாடு

சபரிமலை படிக்கட்டு போன்ற 18 எம்.எல்.ஏ.க்கள்: டி.டி.வி. தினகரன் கருத்து 

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களும் சபரிமலை படிக்கட்டு போன்றவர்கள் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிறுவனர் டி.டி.வி. தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்

Updated On : 30 ஜனவரி, 2024 at 1:16 PM
பகிர்:

சென்னை: தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களும் சபரிமலை படிக்கட்டு போன்றவர்கள் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிறுவனர் டி.டி.வி. தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்ற டி.டி.வி. தினகரன் அதன்பின் ‘அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார்.  அதற்கான கொடியையும் அறிமுகப்படுத்தினார்.

முன்னதாக அவருக்கு ஆதரவாக செயல்பட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். அதுதொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஞாயிறன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது தினகரன் கூறியதாவது:

சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களும் சபரிமலை படிக்கட்டு போன்றவர்கள்.  அவர்கள் எப்பொழுதும் எங்களுடனேயே இருப்பார்கள். திவாகரன் கட்சி ஆரம்பிப்பது பற்றி எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை.  கட்சி என்பது வேறு.  உறவு என்பது வேறு.

தி.மு.க.வுடன் அ.ம.மு.க. கூட்டணி வைப்பதற்கு எங்களது கட்சியின் தொண்டர்கள் ஏற்கமாட்டார்கள்

அற்பர்களுக்கு வாழ்வு வந்தால் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.  யார் மீது வேண்டுமானாலும் வழக்கு போடுவார்கள் என்று தனியார் தொலைக்காட்சி சேனல் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தது பற்றி அவர் கருத்து தெரிவித்தார் 

இவ்வாறு அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.