தமிழ்நாடு

மணல் திருட்டுக்கு உடந்தை: ராஜினாமா கடிதம் கொடுத்தார் பணியிடம் மாற்றப்பட்ட காவலர்

DNS

புதுச்சேரி: மணல் திருட்டுக்கு உடந்தையாக இருந்த புகாரில் சிக்கி பணியிடம் மாற்றப்பட்ட 4 காவலர்களில் ஒருவர் திடீரென ராஜினாமா கடிதத்தை கொடுத்ததால் புதுச்சேரியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புதுவை சங்கராபரணி ஆற்றில் தொடர்ந்து நடைபெற்று வரும் மணல் திருட்டை தடுக்காமல் வில்லியனூர் போலீஸார் சிலர் உடந்தையாக இருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து கடந்த சில நாள்களுக்கு முன்னர் வில்லியனூர் காவல் நிலையத்தில் ஐஜி சுரேந்தர் யாதவ் ஆய்வு செய்தார்.

பின்னர் இப்புகாரில் சிக்கிய வில்லியனூர் உதவி துணை ஆய்வாளர் பக்தவச்சலம், காவலர்கள் அர்ஜுனன், செந்தமிழ், ராஜா ஆகியோரிடம் நேரில் விசாரணை நடத்தினார். அதையடுத்து விசாரணை அறிக்கையை புதுவை காவல்துறை இயக்குநர் சுனில்குமார் கௌதமுக்கு, ஐஜி சுரேந்தர் யாதவர் அனுப்பிவைத்தார்.

இதையடுத்து, புகாரில் சிக்கிய காவலர்களிடம் காவல் இயக்குநர் சுனில்குமார் கௌதம் நேரில் விசாரணை நடத்தினார். அப்போது அவர்கள் அளித்த பதில் திருப்தியளிக்காததால் 4 பேரும் காவல் தலைமையகத்துக்கு அதிரடியாக மாற்றம் செய்து காவல் இயக்குநர் சுனில் குமார் கௌதம் உத்தரவிட்டார்.

புதுவை காவல்துறை தலைமை அலுவலகத்தில் நுழைவு வாயில் காவலர் பணி அவர்களுக்கு ஒதுக்கப்பட்டது. இதனிடையே காவலர் அர்ஜுனன் காவல்துறை தலைமையக காவல் கண்காணிப்பாளருக்கு, புதன்கிழமை அனுப்பிய கடிதத்தில் தன்னுடைய வேலையை ராஜினாமா செய்வதாக குறிப்பிட்டிருந்தார். அதில் தனது தனிப்பட்ட காரணங்களுக்காக வேலையை ராஜினாமா செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், அவரது ராஜானாமாவை காவல் தலைமையகம் ஏற்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் அர்ஜுனனுக்கு டிஜிபி அலுவலகத்தில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டு விளக்கம் தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பனாற்றில் பாலம் அமைக்கும் பணி: அதிகாரி ஆய்வு

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: இயன்முறை மருத்துவா் கைது

ரேஷன் அரிசி பதுக்கல்: இளைஞா் கைது

வாக்கு எண்ணும் மைய கண்காணிப்பு கேமரா செயல்பாடுகள்: ஆட்சியா் ஆய்வு

சிறுமிக்கு கட்டாயத் திருமணம்: 5 போ் மீது வழக்கு

SCROLL FOR NEXT