தமிழ்நாடு

கபினியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதற்கு குமாரசாமிக்கு கமல் நன்றி 

DIN

சென்னை: கர்நாடகாவின் கபினி அணையில் இருந்து காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டதற்கு கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் நன்றி தெரிவித்துள்ளார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக கர்நாடக முதல்வர் குமாரசாமி வெள்ளியன்று மாலை மதுரை வந்திருந்தார். சுவாமி தரிசனத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

கடவுளின் கருணையால் நல்ல மழை பெய்து வருகிறது. எனவே இரு மாநிலங்களும் இடையே நீரை பங்கிடுவதில் பிரச்சனை இருக்காது. அதனால் கடவுளின் அருளால் இம்முறை தமிழகத்திற்கு நீர் திறப்பதில் பிரச்னை இருக்காது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் கர்நாடகாவின் கபினி அணையில் இருந்து காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டதற்கு கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:

கர்நாடக முதல்வரிடம் பேசினேன். கபினி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதற்கு எனது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டேன். தற்பொழுது காவிரி மேலாண்மை ஆணையம் செயல்படத் தொடங்கிய பிறகு, இரு மாநில நல்லுறவால் அடைக்கப்பட்டிருக்கும் பல கதவுகள் திறக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரோஜா பூ..!

ஸீரோ பேலன்ஸ்: சத்தீஸ்கர் பழங்குடிப் பெண் வேட்பாளர்

தேர்தலில் வடகிழக்கு மாநிலங்கள் முக்கியப் பங்காற்றும்: அசாம் முதல்வர்

அழுத்தமான சூழலில் சரியான முடிவுகளை எடுப்பவர் ரோஹித் சர்மா: யுவராஜ் சிங்

ராபா எல்லையில் இஸ்ரேல் டாங்கிகள்: அதிகரிக்கும் போர்ப் பதற்றம்!

SCROLL FOR NEXT