தமிழ்நாடு

வியாபார நோக்க விழாக்களில் நடிகர்கள் இலவசமாக பங்கேற்க வேண்டாம்: நடிகர் சங்கம்

DIN

வியாபார நோக்கத்தை முன்வைத்து நடைபெறும் விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் இலவசமாக பங்கேற்க வேண்டாம் என நடிகர்களை தென்னிந்திய நடிகர் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து இச்சங்கம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-
கடந்த காலங்களில் திரை உலகில் திரைப்பட விழாக்கள், விருது வழங்கும் நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என பல விழாக்கள் நடந்துள்ளன. அந்த நிகழ்ச்சிகளில் நடிகர், நடிகைகள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். ஆனால், சமீப காலங்களில் இவை வியாபார நோக்கத்தில் நடத்தப்படுவதால், அந்த பயனை நடிகர், நடிகைகளும் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் நடிகர் சங்க சிறப்புக் கூட்டத்தில் இதுபற்றி விவாதித்து முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி, இனிமேல் இதுபோன்ற விழாக்களில் கலந்து கொள்ளும் நடிகர்கள் இலவசமாகவோ அல்லது மரியாதைக்காகவோ கலந்து கொள்ள வேண்டாம். பணம் பெற்றுக்கொண்டு கலந்துகொள்வதோ அல்லது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அறக்கட்டளைக்கு பயன்படும் வகையில் பணம் கிடைப்பதை உறுதி செய்தபின் அந்த விழாக்களில் கலந்து கொள்ளலாம். இந்த பணம் பல நலிந்த கலைஞர்களுக்கு உதவி செய்வதற்காகவே பயன்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம்

கிரிக்கெட்டே வாழ்கை, வாழ்க்கையே கிரிக்கெட்!

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

தமிழக, கேரள கடலோரப் பகுதிகளில் முதல் முறையாக அதீத அலை எச்சரிக்கை!

மீண்டும் இணைந்த ‘ஜோ’ பட கூட்டணி!

SCROLL FOR NEXT