தமிழ்நாடு

ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படாது: முதல்வர்

DIN

"தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படாது; அதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் தமிழக அரசு சார்பில் எடுக்கப்பட்டுள்ளன' என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உறுதிபடத் தெரிவித்தார்.
தில்லியில் ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் ஞாயிற்றுக்கிழமை கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து முதல்வர் கூறியதாவது: 
ஸ்டெர்லைட் நிர்வாகம் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு ஆலை இயங்க அனுமதி தர வேண்டும் என்று விண்ணப்பம் அளித்திருந்தது. அந்த விண்ணப்பம் 9.4.2018-இல் நிராகரிக்கப்பட்டுவிட்டது. அதுகுறித்து 13.4.2018-இல் மாவட்ட ஆட்சியர் செய்தித்தாள் மூலம் விளம்பரம் செய்துள்ளார். இதனால், அந்த ஆலை மீண்டும் இயங்காமல் இருக்க மாசுக் கட்டுப்பாடு வாரியம் மூலம் தடை செய்யப்பட்டுள்ளது. ஆலையை இயக்க முடியாது என்ற அறிவிப்பும் அளிக்கப்பட்டுவிட்டது.
18.5.2018-இல் ஸ்டெர்லைட் ஆலையில் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். அதன்பிறகு, அந்த ஆலைக்கு வழங்கப்பட்டிருந்த மின் இணைப்பை துண்டிக்க பரிந்துரை செய்தனர். 20.5.2018-இல் அங்கிருந்த போராட்டக்காரர்களை அழைத்து மாவட்ட சார் ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். ஆகவே, அரசு இந்த விவகாரத்தில் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. இதுகுறித்து போராட்டக் குழுவினருக்கு தெளிவாகத் தெரியும். தற்போது மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படாது என்றார் முதல்வர் பழனிசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: மாணவா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது: தனியாா் பள்ளிகளுக்கு கல்வித் துறை எச்சரிக்கை

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

SCROLL FOR NEXT