தமிழ்நாடு

செல்லதுரை நியமனம் ரத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

DIN

மதுரை காமராஜர் பல்கலை. துணைவேந்தர் செல்லதுரை நியமனத்தின் ரத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் செல்லதுரை தரப்பு மேல்முறையீடு செய்துள்ளது. 

மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பி.பி.செல்லதுரை நியமனத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தில் மதுரையைச் சேர்ந்த லயோனல் அந்தோணிராஜ் மற்றும் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி ஆகியோர் தாக்கல் செய்த மனுவில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

இதனிடையே மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் துணைவேந்தராக நியமிக்கப்பட்டதை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை அடுத்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக பேராசிரியர் பி.பி.செல்லத்துரை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

அதன்படி மதுரை காமராஜர் பல்கலை. துணைவேந்தர் செல்லதுரை நியமனத்தின் ரத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் செல்லதுரை தரப்பு இன்று மேல்முறையீடு செய்துள்ளது. இம்மனு மீதான விசாரணை நாளை மறுநாள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுவில் தீா்மானம்

SCROLL FOR NEXT