தமிழ்நாடு

வரும் 12ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்றால் பிடிவாரண்டு: எஸ்.வி.சேகருக்கு நீதிபதி எச்சரிக்கை

DIN

பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் எஸ்.வி.சேகர் ஆஜராகவில்லை என்றால் பிடிவாரண்டு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி எச்சரித்துள்ளார்.

எஸ்.வி.சேகர் கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி, தனது முகநூல் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவரது நண்பர் திருமலை சடகோபன் பதிவிட்ட தவறான கருத்தைப் பகிர்ந்திருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினரிமிருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இதையடுத்து எஸ்.வி.சேகர், தனது முகநூல் பக்கத்தில் இருந்து அப்பதிவை நீக்கிவிட்டார். 

இந்நிலையில் பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து அவதூறாக பேசியதாக எஸ்.வி.சேகர் மீதான வழக்கில் வரும் 12ஆம் தேதி நெல்லை நீதிமன்றத்தில் ஆஜராக நீதிபதி இன்று உத்தரவிட்டுள்ளார். மேலும் அன்றைய தினம் அவர் ஆஜராகவில்லை என்றால் பிடிவாரண்டு பிறப்பிக்கப்படும் எனவும் நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

கர்நாடகத்தில் 20 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும்: சித்தராமையா நம்பிக்கை

கோபால் கிருஷ்ண கோஸ்வாமி மறைவு: மோடி இரங்கல்!

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

SCROLL FOR NEXT