தமிழ்நாடு

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை: பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி நன்றிக் கடிதம் 

தமிழகத்தில்; எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக மதுரை தேர்வு செய்யப்பட்டதற்கு பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.

DIN

சென்னை: தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக மதுரை தேர்வு செய்யப்பட்டதற்கு பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தின் மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று மத்திய அரசு ஆணை பிறப்பித்திருப்பதாக தமிழக முதல்வர் பழனிசாமி புதனன்று அறிவித்தார்.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு சுமார் 3 ஆண்டுகள் ஆகும் நிலையில், இன்றுதான் இடம் தேர்வு செய்யப்பட்டதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக மதுரை தேர்வு செய்யப்பட்டதற்கு பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.

அவர் தனது கடிதத்தில் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக மதுரை தேர்வு செய்யப்பட்டதற்கு உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

தனிப்பட்ட முறையில் மட்டும் அல்லாது தமிழக மக்களின் சார்பாகவும் எனது நன்றியினைத்  தெரிவித்து கொள்கிறேன்.

தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான எல்லா வித உதவிகளையும் தமிழக அரசு செய்து கொடுக்கும் 

இவ்வாறு அவர் கடிதத்தில் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நான் துரோகம் செய்யவில்லை, தற்கொலைக்கு முயன்றேன்..! விவாகரத்து பற்றி சஹால்!

மாலை மலர்ந்த ஊதா... அம்ரிதா ஐயர்!

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை!

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

SCROLL FOR NEXT