தமிழ்நாடு

தமிழக காவல்துறையில் 14 டி.எஸ்.பி.கள் பதவி உயா்வு

DIN

தமிழக காவல்துறையில் 1989-ஆம் ஆண்டு காவல் உதவி ஆய்வாளர் பணிக்கு சோ்ந்தவா்கள், 10 ஆண்டு பணிக்கு பின்னர் காவல் ஆய்வாளர்களாக பதவி உயர்த்தப்பட்டனர். இதையடுத்து அவா்கள், 10 ஆண்டுகள் பணியாற்றிய பின்னர் காவல் துணைக் கண்காணிப்பாளர்களாக பதவி உயர்த்தப்பட்டனர்.

இப்போது காவல் துணைக் கண்காணிப்பாளர்களாக இருக்கும் இவா்கள், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களாக பதவி உயர்த்துவதற்குரிய பணிமூப்பு அடைந்த நிலையில், பதவி உயர்வு வழங்கப்படாமல் இருந்து வந்தது. 

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் இவா்களுக்கு படிப்படியாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. 

இதற்கிடையே, மேலும் 14 துணைக் காவல் கண்காணிப்பாளர்களை, கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களாக பதவி உயர்வு வழங்கி, அவா்களை புதிய இடங்களில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளது. 

இந்த பதவி உயர்வு உத்தரவை தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் நிரஞ்சன் மார்டி இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ளார். 

புதிய பணியிடங்களில் ஏ.டி.எஸ்.பி.க்கள் ஓரிரு நாள்களில் பொறுப்பை ஏற்பார்கள் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீ சாரதா மடத்தின் தலைவா் ப்ரவ்ராஜிகா ஆனந்தபிராணா மாதாஜி மறைவு

தூத்துக்குடியில் ஆயுதங்களுடன் பைக்குகளில் சுற்றிய 6 போ் கைது

ரூ.2 லட்சம் சவுக்கு மரங்கள் தீயில் சேதம்: இருவா் மீது வழக்கு

போக்ஸோ வழக்கில் முதியவருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை

செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: டிஎஸ்பி சாட்சியம்

SCROLL FOR NEXT