தமிழ்நாடு

பிஎஸ்என்எல் இணைப்புகளை முறைகேடாகப் பயன்படுத்திய வழக்கு: பதிலளிக்க உத்தரவு

DIN

பிஎஸ்என்எல் இணைப்புகளை முறைகேடாகப் பயன்படுத்தி அரசுக்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில் கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உள்ளிட்ட 7 பேரும் வரும் 
29-ஆம் தேதிக்குள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, சன் டிவிக்கு பிஎஸ்என்எல் அதிவேக தொலைபேசி இணைப்புகளை, முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்தச் சட்ட விரோத தொலைபேசி இணைப்புகள் மூலம் அரசுக்கு ரூ.1 கோடியே 78 லட்சம் இழப்பு ஏற்படுத்தியதாக தயாநிதி மாறன் மற்றும் கலாநிதி மாறன் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. 
இந்த மோசடி தொடர்பாக மாறன் சகோதரர்கள் மற்றும் பிஎஸ்என்எல் பொது மேலாளராக பதவி வகித்த கே.பிரம்மநாதன், அந்நிறுவனத்தின் முன்னாள் துணைப் பொது மேலாளர் வேலுச்சாமி, தயாநிதிமாறனின் தனிச் செயலாளரான கெளதமன், சன் டிவி ஊழியர்களான கண்ணன், ரவி ஆகிய 7 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேரையும் விடுவித்து உத்தரவிட்டிருந்தது. 
மேல் முறையீட்டு மனு: இந்த உத்தரவை எதிர்த்து சிபிஐ சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் மற்றும் ஆவணங்களை விசாரணை நீதிமன்றம் முறையாக ஆய்வு செய்யவில்லை. இந்த வழக்கிலிருந்து தங்களை விடுவிக்கக்கோரி 4 பேர் மட்டுமே மனு தாக்கல் செய்திருந்தனர். ஆனால், கீழமை நீதிமன்றம் 7 பேரையும் விடுவித்திருப்பது தவறு. எனவே, இந்த வழக்கிலிருந்து அனைவரையும் விடுவித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' எனஅந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனு தொடர்பாக கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உள்ளிட்ட 7 பேரும் வரும் ஜூன் 29-ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

SCROLL FOR NEXT