தமிழ்நாடு

லாரி ஸ்டிரைக் வாபஸ்

DIN

நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் கடந்த திங்கள்கிழமை முதல் மேற்கொண்டிருந்த வேலை நிறுத்தப் போராட்டம் வியாழக்கிழமை வாபஸ் பெறப்பட்டது. 
லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகள் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளதை அடுத்து இம்முடிவு எடுத்துள்ளதாக அகில இந்திய சரக்கு வாகன உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பி.சென்னாரெட்டி, பொதுச் செயலர் ராஜேந்திர சிங் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
டீசல் விலையைக் குறைத்து 3 மாதங்களுக்கு ஒருமுறை விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் சரக்கு வாகன உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை திங்கள்கிழமை தொடங்கியது.
வேலைநிறுத்தம் வாபஸ்: இந்நிலையில், அகில இந்திய சரக்கு வாகன உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் பி.சென்னாரெட்டி, பொதுச் செயலர் ராஜேந்திர சிங் ஆகியோர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. துறை அமைச்சர் தலைமை இடத்தில் வரும் 27-ஆம் தேதி வரை இல்லை. அதன் பிறகு லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்களின் நலன் கருதி சரக்கு வாகனங்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் ஒத்திவைக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

SCROLL FOR NEXT