தமிழ்நாடு

காங்கிரஸுடன் கூட்டணியா?: கமல் விளக்கம்

DIN

காங்கிரஸுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைக்குமா என்பது குறித்து அந்தக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் விளக்கம் அளித்தார்.
காங்கிரஸ் தேசிய தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை தில்லியில் சந்தித்த கமல்ஹாசன் வியாழக்கிழமை இரவு சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி:
சோனியா காந்தியையும், ராகுல் காந்தியையும் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தேன். தற்போதைய அரசியல் விவகாரம் குறித்தும் பேசினேன். பத்திரிகையாளர்கள் நினைப்பதுபோல அரசியல் கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை. காங்கிரஸ் தலைவர்களைச் சந்தித்ததால் நான் ஒருவழிப் பாதையில் செல்வதாக நினைக்க வேண்டாம்.
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து விரைவில் முடிவு செய்வோம். தில்லி சென்றிருந்தபோது அந்த மாநில முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வெளியூர் சென்றிருந்ததால் அவரைப் பார்க்க முடியவில்லை.
காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் செயல்பாட்டை ஒவ்வொரு முறையும் விமர்சித்து வருகிறோம். தொடர்ந்து விமர்சிக்கவும் செய்வோம். காவிரி மேலாண்மை ஆணையத்தை முறையாகச் செயல்படுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் கமல்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

கர்நாடகத்தை சீரழித்தது காங்கிரஸ்: மோடி

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

SCROLL FOR NEXT